காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கூறியதை பார்ப்போம்
துரைமுருகன்: காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை; எல்லாமே நாடகம்
கனிமொழி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது வாரியம் அமைக்க காலம் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு செய்கிறது
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்: மத்திய அரசு கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து தீர்ப்பை நிலைநாட்ட போராடும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தெரிவிக்கும்
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைந்தால், சண்டை போட்டாவது தண்ணீரைப் பெற்று தருவோம்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அனைத்து கட்சிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்திருக்க வேண்டும்