புது தில்லி: வடமாநிலங்களில் வெடித்துள்ள போராட்டங்களால் ரயில்சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் தலித் அமைப்புகள், வடமாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களும் தொடர இருப்பதாக பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.