மாநிலத்தை முன்னேற்றுவதில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கூறியுள்ளார். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது… குஜராத் மாநிலம், இந்தியாவின் கலிஃபோர்னியாவாக உள்ளது. மோடி இந்த மாநிலத்துக்கு நற்பணிகளைச் செய்துள்ளார். பருவநிலை மாறுபாடு தொடர்பாக குஜராத் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு இறுதியில் பாரீஸ் நகரத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாறுபாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மோடி தலைமையிலான இந்திய அரசு முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
மாநிலத்தை முன்னேற்றுவதில் மோடியைப் பின்பற்றுங்கள்: அர்னால்டு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari