ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத், 49%க்கு மேல் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்தியப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார் மோகன் ஜி பாகவத். அப்போது அவர், உலகில் எந்த ஒரு நாடும் விமானத் துறையில் 49 சதவீதத்திற்கு மேல், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவில்லை என்றார். ஏர் இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு இந்தியரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய மோகன் ஜி பாகவத், இந்தியப் பொருளாதாரக் கொள்கை வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சிறு தொழில்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.