புது தில்லி: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப் பட மாட்டாது என்று சட்ட அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தில்லியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மத்திய அரசின் நிதியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.7,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து, நிதிக்குழு தலைவரிடம் கூறினோம். நிதி தொடர்பான தமிழக கோரிக்கைகளுக்கு, நல்ல முடிவை தெரிவிப்பதாக நிதிக்குழு தலைவர் உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யக் கூடாது என்ற கோரிக்கைக்கு, மத்திய அரசும் அதே நிலையில் தான் உள்ளது என சட்ட அமைச்சர் தெரிவித்தார் என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.