சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த அஸ்ராம் பாபு 15 நிமிடம் தாமதமாக வந்ததோடு, தான் பூஜை நடத்தி விட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும், இவருடைய மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவர் மற்றும் உத்தரபிரதேச சிறுமி ஆகியோரை பாலியியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
யார் இந்த அஸ்ராம் பாபு:
அஸ்ராம் பாபுவின் இயற்பெயர் அசுமல் சிர்மலனி. ஏகபட்ட பக்தர்களை கொண்டுள்ள அஸ்ராம் பாபு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400 ஆஸ்ரமங்களை நிறுவியுள்ளார். அவரது சுய சரிதை ‘அஸ்ராம் பாபுஜி கி ஜீவன் ஜஹங்கி’ என்ற பெயரில் அவரது ஆசிரமத்தால் வெளியிட்டப்பட்டது. தனது தந்தை உயிருடன் இருந்தவரை தனது பள்ளி படிப்பை மூன்றாம் வகுப்பு வரை படித்த அஸ்ராம், தந்தை மறைவுக்கு பின்னர் பல்வேறு ஆஸ்ரமங்களில் வசதித்து வந்தார். தனது 15 வயதில் ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறினார்.
ஆன்மீக குருவாக மாறிய இவர், 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் அஸ்ராம் பாபு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்:
77 வயதான அஸ்ராம் பாபு, ஜோத்பூரில் 16 சிறுமி ஒருவரை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி டெல்லியின் கமலா நகர் போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் இவரை மருத்துவ பரிசோதனிக்கு அழைத்து சென்றனர். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டர்.
இவர் மீது ஐபிசி சட்டம் 342, 376, 354 A, 506, 509/34 , 23, 26 பிரிவு போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, அவர் மீது பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் சிறுமியை சட்ட விரோதமாக கட்டுபாட்டி வைத்திருந்தது ஆகிய குற்றங்கள் அடங்கிய 1,300 பக்க குற்றப் பத்திரிகையை ராஜஸ்தான் போலீசார் பதிவு செய்தனர்.
இது மட்டுமின்றி மேலும் இரண்டு பாலியல் வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.