- Ads -
Home இந்தியா என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது: மெகபூபா முஃப்தி

என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது: மெகபூபா முஃப்தி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற கல்வீச்சு வன்முறையில், காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக இளைஞர் திருமணி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி, காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் – குல்மார்க் சாலையில் நார்பல் பகுதியில் திங்கள் கிழமை சென்று கொண்டிருந்த போது, அவர் வந்த வாகனம் மீது கல்லெறிந்துள்ளனர் காஷ்மீர் இளைஞர்கள். படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

சென்னையைச் சேர்ந்த அந்த நபர் ராஜவாலி என்பவரின் மகன் திருமணி (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள சேர் இ காஷ்மிர் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாகவும், பலத்த காயமடைந்த நிலையில், திங்கள் மாலை அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, பின்னர் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.

ALSO READ:  காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

இந்நிலையில் காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான தமிழக இளைஞர் திருமணி உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடலை இன்று பிற்பகல் தமிழகத்திற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறும் போது, என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறினார். மேலும், இந்தச் சம்பவத்தில் இளம் பெண் ஒருவரும் பலத்த காயம் அடைந்தார். இருவரின் நிலை குறித்து குறிப்பிட்டு, டிவிட்டர் பதிவில் தனது இரங்கலையும் இந்தச் சம்பவத்துக்காக தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version