புது தில்லி: தலைமை நீதிபதியை நீக்கக்கோரிய காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபில் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களான பிரதாப் சிங் பாஜ்வா, அமீ ஹர்ஷாத்ரே யக்ஞிக் ஆகியோரின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளித்த மனுவை அவர் தள்ளுபடி செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.
PUSH KAPIL SIBAL ALSO OUT OF COURT AND POLITICS.
Why are these Congees behaving in uncivilized manner. It is highly irritating.