கர்நாடக தேர்தல் பிரசாரம் முடிந்துள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் ஓட்டுப் பதிவும் நிறைவடைந்துவிடும் நிலையில், அதற்கு மறுநாள் காவிரி வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப் படும் என்று யு.பி.சிங் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மே 14ஆம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்கப்படமாட்டாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.