பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று நேபாளம் செல்கிறார்.
நேபாள பிரதமர் சர்மா ஓலியை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேபாள பிரதமராக பதவியேற்ற காட்கா பிரசாத் சர்மா ஓலி, இந்தியா வந்தார். அப்போது இரு பிரதமரிடையும் பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
இதையடுத்து, இன்று நேபாளம் செல்லும் பிரதமர் மோடி 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 900 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேபாளம் சென்றார் என்பது குறிப்பிடதக்கது.