பேஸ்புக்கில் போஸ்ட் செய்து புகார்: கோல்கத்தா பஸ்ஸில் பெண்கள் முன் ‘சுய இன்பம்’ செய்தவர் கைது:

ஹூக்ளி மாவட்டத்தின் பைத்யாபதியைச் சேர்ந்த நபர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது, இரு பெண்கள் முன் சுய இன்பம் அன்பவித்தாராம். இந்தப் படத்தையும் வீடியோவையும் தங்கள் பேஸ்புக்கிலும் போலீஸாரின் பேஸ்புக்கிலும் பகிர்ந்து புகார் அளித்த சிறிது நேரத்தில், குறிப்பிட்ட நபர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூக்ளி மாவட்டத்தின் பைத்யாபதியைச் சேர்ந்த நபர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது, இரு பெண்கள் முன் சுய இன்பம் அன்பவித்தாராம். இந்தப் படத்தையும் வீடியோவையும் தங்கள் பேஸ்புக்கிலும் போலீஸாரின் பேஸ்புக்கிலும் பகிர்ந்து புகார் அளித்த சிறிது நேரத்தில், குறிப்பிட்ட நபர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப் பேருந்தில் இரு பெண்கள் முன்னர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி கோல்கத்தா போலீஸார் சனிக்கிழமை ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோவை இரண்டு பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.

அந்த நபர் ஒரு தொழிலாளி என்றும், ஷ்யாம்புகூர் நகர் காவல் நிலையம் பகுதியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கொல்கத்தா போலீஸார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளனர்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பைத்யாபதியில் இருந்து வந்தவர் அந்த நபர் என்றும், அவரது செய்கையால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகார் வந்த சில மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் நகர போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வீடியோ பதிவை அந்த இரண்டு பெண்களும் தங்கள் பேஸ்புக் பக்கத்திலும், கொல்கத்தா காவல்துறையின் பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்தனர். அதனைக் கண்டு போலீசார் விசாரணை நடத்தி அந்த நபரைக் கைது செய்தனராம்.

“பஸ் நடத்துனருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​எங்கள் வேண்டுகோளை அவர் புறக்கணித்துவிட்டார். இதே நபர், பதினைந்து நாட்களுக்கு முன்னர் இதே போன்று மோசமான சைகைகள் செய்தபோது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. எனவே இப்போது வீடியோ பகிர்ந்தோம். எங்களுக்கு நீதி தேவை” என்று பாதிக்கப்பட்ட தனது பேஸ்புக் பதிவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து குறிப்பிட்ட போலீஸார், “எங்களுக்கு எவ்வித புகாரும் தேவையில்லை. எங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களே எங்களுக்குப் போதும். நாங்கள் ஏற்கனவே ஒரு வழக்கு இதுகுறித்து தாக்கல் செய்துள்ளோம், குற்றவாளிகளைக் கண்காணிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று கூறிய போலீஸார், பின்னர் அந்த நபரைக் கைது செய்துவிட்டதாக பேஸ்புக் பக்கத்திலேயே தெரிவித்திருந்தனர்.