மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.
அஸ்ஸாம், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கு வங்கத்துக்கு பாதுகாப்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் அந்த மாதம் 23-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.