நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு மட்டுமே வரைவு திட்டம் வழங்கப்பட இருப்பதாகவும், மனுதாரர்களான தமிழக,கர்நாடக அரசுகளுக்கு வரைவு திட்ட நகல் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து காவிரி வழக்கு விசாரணையை மே 16 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.