இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மீடியாக்களில் விளம்பரத்திற்காக மட்டும் 4,343.26 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலர் அயல் கால்காலி, விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவு செய்துள்ள தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
அவர்ககு பதிலளித்த ஆணையம், ஜூன் 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பத்திரிகை விளம்பரகளுக்காக 424.85 கோடியும், எலக்ட்ரானிக் மீடியாகளில் 79.72 கோடியுமாக மொத்தம் 953.54 கோடி செலவிட்டுள்ளது.
2015-16 ஆண்டுகளில் 1,171.11 கோடியும், 2016-17ம் ஆண்டுகளில் 1,263.15 கோடியும், 2017-18 ஆண்டுகளில் 147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.