கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் பெங்களூரூ, டெல்லி பாஜக அலுவலகம் முன் உற்சாகம் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. எனவே இங்கு காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பது பொய்யாகி போனது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை உள்ளது. காங்கிரஸ் பா.ஜ.,வை விட அதிக தொகுதிகள் பெற்றால் குமாரசாமி ஆதரவுடன் காங்., ஆட்சியை அமைக்கலாம் என கனவு கண்டது. இதுவும் தகர்ந்து போனது.
ஆகையால் தற்போது பா.ஜ., தனித்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எடியூரப்பா மீண்டும் முதல்வராவார்.