காவிரி நீர் வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு இன்று தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உள்ளன.
காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான, வரைவு திட்டத்தை கடந்த 14ம் தேதி தாக்கல் செய்ய கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 14ம் தேதி காலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையின் போது, சீலிடப்பட்ட கவரில், காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.