ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் அந்த படகு தள்ளாடியது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போனவர்களில் 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் சிக்கிய மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.