பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி,
ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்துவோம் என்று முடிவெடுத்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கண் கலங்கிய
சித்தராமையா; ஊழலற்ற ஆட்சி நடத்தியும் கர்நாடக தேர்தலில் தோல்வி என வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்துவரும் நிலையில் 12 எம்எல்ஏக்களை காணவில்லை
என்றும், தேர்தலில் வெற்றி பெற்ற 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்தாக செய்திகள் வெளியானது.