கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களை கைபற்றி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுனரின் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், 78 இடங்களை பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் வென்ற மஜத வுடன் கூட்டணி அமைப்பது ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்நிலையில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், 15 நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வழக்கத்திற்கு மாறாக இரவு 2 மணிக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.
பின்னர் விதான் சவுதா வந்த அவர், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் – மஜத எம்எல்ஏ., சட்டபேரவை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் குதிரை பேரத்தை தடுக்க தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்தில். பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேரà¯à®¤à®²à¯à®•à¯à®•௠மà¯à®©à¯ மஜத(JDS)வை கனà¯à®©à®¾ பினà¯à®©à®¾à®µà¯†à®©à¯à®±à¯ திடà¯à®Ÿà®¿ விடà¯à®Ÿà¯ தனà¯à®©à®¿à®Ÿà®®à¯ 78 தலையாடà¯à®Ÿà®¿à®•ள௠இரà¯à®¨à¯à®¤à¯à®®à¯ வெறà¯à®®à¯ 38 தலைகளை வைதà¯à®¤à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯ JDSஸிடம௠சரணடைநà¯à®¤à¯ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ பதவியையà¯à®®à¯ தாரை வாரà¯à®¤à¯à®¤à¯ மகà¯à®•ளை à®®à¯à®Ÿà¯à®Ÿà®¾à®³à®¾à®•à¯à®•ப௠பாரà¯à®¤à¯ மணà¯à®£à¯ˆà®•à¯à®•வà¯à®µà®¿à®¯à®¤à¯ வெடà¯à®•கà¯à®•ேடான செயலà¯. ராகாவின௠ராகம௠அபஸà¯à®µà®°à®®à®¾à®•ி வெக௠நாடà¯à®•ளாகி விடà¯à®Ÿà®¤à¯.