கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட தொடர்பான வழக்கில் கூகிள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட மீடியாகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் கத்வா பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.