December 6, 2024, 10:52 PM
27.6 C
Chennai

கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரைக் காணவில்லை!

பெங்களூர்: கர்நாடக தற்காலிக அவைத் தலைவராக போப்பையாவை நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், போப்பையாவை நியமித்தது செல்லும் என்று தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம். ஆனால், காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே கர்நாடக சட்டமன்றக் கூட்டம் தொடங்கிவிட்டது.

கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு அவைத்தலைவர் போப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முன்னரே எதிர்பார்த்தபடி, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டசபைக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார் எடியூரப்பா. உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி, வாக்கெடுப்பு ஊடகங்களில் நேரலை செய்யப்படுகிறது.

AL