பழந்தின்னி வவ்வால்களில் இருந்துதான் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பரவும் நிபா (Nipah) வைரஸ் காய்ச்சல் தாக்கி கேரளாவில் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் பரவியுள்ள இந்த வைரஸ் காய்ச்சல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கேரளா அருகில் உள்ள 4 மாவட்டங்களில் தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதை தொடர்ந்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கோழிக்கோடு விரைந்துள்ளனர். இவர்கள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நிபா வைரஸ் பரவினால்….
நிபா வைரஸ் பரவினால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை இருக்கும். 10 முதல் 12 நாட்கள் வரை தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் கை குலுக்கினாலும், அருகில் இருந்தாலும் கூட காய்ச்சல் பரவும். எனவே, நோயாளிகள் அருகில் செல்லும் போது முகமூடியும், கையுறையும் அணிய வேண்டும். மேலும், வவ்வால்கள் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது. இவை அதிகம் உள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீர், கள் ஆகியவற்ைற குடிக்க வேண்டாம் என்று கேரள சுகாதாரதுறை எச்சரித்துள்ளது.