லக்னோ பயணமாக அலகாபாத் மேயர் அபிலாஷா குப்தா நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அதிகாரிகள், இந்த காரை அவர் வாங்கவில்லை என்றும், நிர்வாக அதிகாரிகள் இந்த காரை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மேயர், காரில் நம்பர் பிளேட் இல்லாதது இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தனக்கு தெரிய வந்ததது. உடனடியாக நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பம் செய்து விட்டோம். நம்பர் பிளேட் கிடைத்தும் பொருத்தப்படும் என்றார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், சாலை பாதுகாப்புக்காக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்திர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.