கர்நாடகத்தில் குமாரசாமியை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய பேரம் ஒருவழியாகப் படிந்தது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுத்து, மற்ற அனைத்து முக்கியத் துறைகளையும் காங்கிரஸே மீண்டும் பெற்றுவிட காய் நகர்த்தியது. அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், குமாரசாமி பதவியேற்ற பின்னர் இந்தக் குழுவை அமைக்கலாம் என்று கூறப்பட்டதால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரஸ் பெறுகிறது. காங்கிரஸின் நெருக்குதலுக்கு அடிபணிந்த குமாரசாமி, இதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி துணை முதல்வராக கர்நாடக காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் பதவி ஏற்க வுள்ளதாக தகவல் வெளியானது. இன்னொரு தலைவரான டி.கே.சிவகுமாரும் துணை முதல்வர் பதவிக்கு கண் வைத்தார். ஆனால் அவரது வேண்டுகோள் செவிமடுக்கப் படவில்லை.
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று தில்லிக்குச் சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக உடனிருந்த கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக் கொண்டார். புதன்கிழமை நாளை குமாரசாமி பதவியேற்கும் போது, காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இத௠தான௠அரசியல௠எனà¯à®ªà®¤à®¾ ? யாரà¯à®®à¯ மகà¯à®•ளà¯à®•à¯à®•௠சேவை செயà¯à®¯ விரà¯à®®à¯à®ªà®µà®¿à®²à¯à®²à¯ˆ அவரà¯à®•ள௠பணம௠சமà¯à®ªà®¾à®¤à®¿à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯ அத௠தான௠எணà¯à®£à®®à¯ ,வீரபà¯à®ªà®¾ சொனà¯à®© நாடà¯à®®à¯ நாடà¯à®Ÿà¯ மகà¯à®•ளà¯à®®à¯ நாசமாகப௠போகடà¯à®Ÿà¯à®®à¯ எனà¯à®ªà®¤à¯ நினைவà¯à®•à¯à®•௠வரà¯à®•ிறதà¯