கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
கேரளாவில் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.