தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் 6 கிலோ எடையில் தங்கத்தால் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான வாளை கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
தேவஸ்தான துணை செயலாளர் இந்த வாளை பெற்றுக்கொண்டார். முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அருகே தங்க வாள் வைத்து அலங்ககரிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.