புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பிறந்தநாளுக்கு விதவிதமான பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அவற்றில் நாராயணசாமி விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த பேனர்தான் டாப் ஹிட்டாகியுள்ளது.
நாராயணசாமி இலவச அரிசித் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றுக்கு தடையாக வரும் பந்துகளை தூக்கி வீசி, எட்டி உதைத்து அமர்க்களப் படுத்தும் விளையாட்டு வீரராக பேனரில் ஜொலிக்கிறார் நாராயணசாமி.
ஆனால் தன் பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ இடையூறாக இருப்பின் அவற்றை தம் செலவிலேயே அகற்றுவதாகவும் நாராயணசாமி கூறியிருந்தார். முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.