கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கர்நாடகா முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற குமாரசாமி, விவசாய கடன்கள் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இல்லையெனில் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுவதாக தெரிவித்தார்.
ஒருவாரத்துக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படாவிட்டால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.