அனைத்து மாநில ஆளுநர்களுக்குமான மாநாடு டெல்லியில் ஜூன் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அரசின் திட்டங்கள், உள்துறை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதே போல சட்டமேதை அம்பேத்கரின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனையும் இந்த மாநாட்டில் இடம்பெற உள்ளது.
மாநாட்டின் இறுதிநாளில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.