நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் அறிவித்துள்ளார்.
மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டன. அதில் கல்வியாளர்கள், மாணவர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நீட் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.