2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சில இடங்களில் தோல்வியை தழுவினாலும், எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறுகிய காலமே நீடிக்க கூடியது என்று குறிப்பிட்டார். அவர்களுக்குள் யார் தலைவர் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய நிலை ஏற்படுவதுடன், ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வது கடினம் என பாஸ்வான் சுட்டிக்காட்டினார். எனவே, 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.