மருத்துவ படிப்புகளுக்கான தகுதித் தேர்வு – நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் – சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வினை எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக, சிபிஎஸ்இ. தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அந்த வகையில் நீட் தேர்வில் தமிழகம் 39.55% தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூலை 25-ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.
மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும் என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.
முதல் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஜூலை 12க்குள் கல்லூரியில் சேர வேண்டும். 2-ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 15 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆக.3ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும் என்று எம்.சி.ஐ தெரிவித்துள்ளது.
In all states the pass percentage is between 30% and 60 % only. No worries for Tamil Nadu alone. All should improve.