புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட 3 சதவீதம் அதிகம்.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் மொத்தம் 15,200 கோடி டாலரில் இருந்து 22,275 கோடி டாலராக உயர்ந்துள்ளன. சேவை, கம்ப்யூட்டர், சாப்ட்வேர், தொலைத்தொடர்பு, கட்டுமானம், ஆட்டோமொபைல் துறைகள் முதலீடுகளை அதிகமாக ஈர்த்துள்ளன.
மொரீஷியஸ், சிங்கப்பூர், ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அதிக அளவு முதலீடுகள் வருகின்றன என தொழில் கொள்கை மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.