இதுகுறித்து ஸ்ரீ திரெளபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ திரெளபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு சார்பில், பெங்களூர், சிவாஜிநகர், பழைய மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் திருக்கோயிலில் கடந்த 47 ஆண்டுகளாக, திரெளபதி அம்மன் தீமிதி விழா நடைபெற்றுவருகிறது. கடந்த மே 4-ம் தேதி 47-ஆம் ஆண்டு திரெளபதி அம்மன் தீமிதி விழா நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கிது. அன்றுமுதல், மகாபாரத சொற்பொழிவும் நடைபெற்று வந்தது. ஜூன் 13-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சொற்பொழிவு நிறைவடையவுள்ளது.
தீமிதி பெருவிழா: இன்று மாலை 5 முதல் தீமிதி விழா நடைபெற உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடத்தில் இருந்து அக்னிகரகம் புறப்பட்டு ஆர்பிஏஎன்எம் எஸ் பள்ளி விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கும். இந்த ஆண்டுக்கான அக்னிகரகத்தை பி.ஆர்.ராஜன் எடுக்கிறார். இதைத் தொடர்ந்து 600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி தீமிதித்து பிரார்த்தனையை நிறைவு செய்வர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.