ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் & 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது! #INDvAFG
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்யில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.
இந்திய ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இதை அடுத்து, ஆப்கன் வீரர்களின் பந்துகளை இந்திய வீரர்கள் சிதறடித்தனர். இந்நிலையில் நேற்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது இந்தியா.தொடர்ந்து இரண்டாவது நாளாக முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களை எடுத்தது.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ்ஸை இன்று விளையாடியது ஆப்கன் அணி. தனது முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கன் அணி 109 ரன் எடுத்தது. இதை அடுத்து பாலோ ஆன் பெற்று தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடியது.
இரண்டாவது இன்னிங்க்ஸிலும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த ஆப்கன் அணி, 38.4 ஓவர் விளையாடி, 103 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தங்களது டெஸ்ட் அந்தஸ்துக்கான அறிமுகப் போட்டி இரண்டே நாட்களில் முடிவு பெற்றதில் ஆப்கன் வீரர்கள் சோர்வடைந்தாலும், மிகவும் திரில்லாக இருந்தது என்று கூறினர்.