கர்நாடகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகம் மழை பெய்து கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், அணையை காப்பாற்றும் பொருட்டு, அதில் இருந்து உபரி நீரை நேற்று திறந்துவிட்டது கர்நாடக அரசு.
இது குறித்து அறிந்ததும், நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் நன்றி தெரிவித்ததாக டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், கர்நாடக முதல்வரிடம் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாகவும், காவிரி ஆணையம் செயல்பட தொடங்கினாலும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வு அவசியம் என்றும் கூறியிருந்தார்.
Spoke to @CMofKarnataka . Expressed My pleasure on the opening of Kabini. Ultimately even after the Cauvery water management Authority starts functioning, only goodwill between the two States will open many more shut doors.
— Kamal Haasan (@ikamalhaasan) June 15, 2018
அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய அரசும் ஒருவழியாக களத்தில் இறங்கி வெகுகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்ட பிறகு, பழைய பாணியில் காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன் என்று கமல் கூறியபோது, தமிழகத்தில் பல உள்ளங்கள் கொதித்தெழுந்தன.
இப்போது மீண்டும் அதே பாணியில், கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கமல் பதிவிட்டதைக் கண்டு பலரும் கொதித்துப் போயுள்ளனர்.
இதன் தாக்கம், சமூக ஊடகங்களில் பரவலாக வெளிப்படுகிறது.
* தண்ணீரே திறந்துவிட்டாலும் அவரிடம் பேச என்ன இருக்கிறது.அவரென்ன நமக்கு பிச்சையா போட்டார். நம் உரிமை…..அதுவும் தானாய் திறந்த தண்ணீருக்கு அவரிடம் எதற்கு பேசவேண்டும்? @SURESH_SANAGAM
Replying to @cinemapudhar @ikamalhaasan @CMofKarnataka
* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்…..இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? – என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!