பயணிகள் வசதிக்காக, தாம்பரம் -கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று இயக்கப்படவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(06039), மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். இந்த ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டியும், தூங்கும் வசதி கொண்ட ஆறு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஒன்பதும் இணைக்கப்படவுள்ளன.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு கட்டண ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 15ம் தேதியே தொடங்கப்பட்டு விட்டது.