பிரதமர் மோடி திருமணம் ஆகாதவரா? ஆளுநர் பேச்சால் அதிகரித்த சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்றும், திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் யசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கவர்னர் ஆனந்தி பென், பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர்” என்று பேசியதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.