கேரளத்தில் 3 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்

கேரளத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி.யான ஜாய் ஆப்ரகாம், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.ஜே.குரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சி.பி. நாராயணன் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேரளத்தில் மொத்தம் 9 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் தலா 3 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். கேரள காங்கிரஸ் (எம்), இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேர் உள்ளனர்.