பாரத பிரதமர் விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் இந்திய முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பொதுசேவை மையம் மூலம் காணொளி கலந்துரையாடல்நடத்தினார் ,இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார் இதையொட்டி
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பொது சேவை மையத்தில் (தனா கம்ப்யூட்டர் அகாடமி) டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பாரத பிரதமர் நமது விவசாயிகளிடம் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.
இதில் பாரதப்பிரதமர் பல்வேறு மாநில விவசாயிகளுடன் பங்குபெற்று நமது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் பற்றி கலந்துரையாடினார்
கலந்துரையாடலுக்கு பிறகு கிராம முதலீட்டாளர்கள் செயல்பாடுகள், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சேமிப்பு, பட்ஜெட், வங்கி கணக்கின் முக்கியத்துவம், காப்பீடு, அரசு திட்டம், மூலதன சந்தைகள் போன்றவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுசேவை மைய மண்டல மேலாளர் அருள்செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், தனா கம்ப்யூட்டர் நிர்வாகி தனலட்சுமி, திசையன்விளை தபால் நிலைய அதிகாரி சுடர் வேல் முருகன், திசையன்விளை யுனைடெட் இந்தியா இன்ஸ்சுரன்ஸ் மேலாளர் பழனி, விவசாயிகள், ஊர் பெரியவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்குபெற்றனர்
,இதே போல தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் உள்ள பொது சேவை மையத்தில் (செல்வி ஜெராக்ஸ்) நடைபெற்ற நிகழ்வில் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர் ,கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ,பயிர் காப்பீடு குறித்த குறிப்புகள் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை பொதுசேவை மைய தொடர்பாளர் பிரமநாயகம் செய்திருந்தார்
பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்
Popular Categories