காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் என்றார்.