மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழு-வதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்-களுக்கு விதிக்கப்-பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த தடையை மீறுபவர் களுக்கு 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் தெர்மாகோல் பொருட்களையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.
எனினும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களின் பயன்பாட்டுக்கு மாறிக்கொள்வதற்கு வசதியாக அரசு மூன்று மாதகால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் இன்று முதல், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது