ஏழுமலையான் கோயில் நகைகள் இன்று ஆய்வு

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ளது.

இந்நிலையில், இது ஆகம விதிகளை மீறிய செயல் எனக் கூறி, ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர்களில் ஒருவராக விளங்கும் சுந்தர வதன பட்டாச்சாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஏழுமலையானின் நகைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.