கடப்பாவில் உருக்காலை அமைக்கக் கோரி டெல்லியில் இன்று தர்னா : தெலுங்கு தேசம் அறிவிப்பு

கடப்பாவில் உருக்காலை அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், இன்று தர்னா போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களுடனும், இதர கட்சிகளின் தலைவர்களுடனும் கடந்த திங்கள்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடினார்.

அதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவின் தனிச் சிறப்பு அலுவலர் ஸ்ரீனிவாஸ் ராவ், வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் வரும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் தர்னா போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.