ஹைதராபாத்தில் இன்று தீயணைப்பு மாநாடு

ஹைதராபாத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் பாதுகாப்பு, தீயணைப்பு மாநாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து பெங்களூரில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், யுபிஎம் இந்தியா மேலாண் இயக்குநருமான யோகேஷ் முத்ராஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைதராபாத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் பாதுகாப்பு, தீயணைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதில் பாதுகாப்பு, தீயணைப்புக்கு தேவையான உபகரணங்களும் இடம்பெறும்.

அண்மைக்காலமாக சர்வதேச அளவில் பாதுகாப்பு, தீயணைப்பு உள்ளிட்ட சேவைகள் அவசியமாகியுள்ளது. தீயணைப்பு துறையினர் பல்வேறு பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் சர்வதேச அளவில் அத்துறைகளில் சிறந்து விளங்கும் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த துறை நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.