மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, ஆளும் மம்தா கட்சியினர் மீது பல்வேறு புகார் அளித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.கவினர் ஆளும் கட்சியால் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இங்கு நடைபெறும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் எனவும் அவர் உறுதி அளித்தார். மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் எனவும் அவர் சவால் விடுத்தார்.