
புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில் ஒரு நோட்ஸ்ஸாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்த ஜேட்லி, ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி என்ற ராகுலின் கருத்து இந்தியாவில் சரிவராது எனக் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் முதலாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அருண் ஜேட்லி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைத் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பது…
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப் பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு இது. மறைமுக வரிகள், பதினேழு வரிகள், பல வித செஸ் வரிகள், மத்திய மாநில வரிகள் என பல கட்ட வரி விதிப்பை தூக்கி எறிந்துவிட்டு, ஒற்றை வரி விதிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப் பட்டது.
இந்தியா, பல மாநிலங்களின் தொகுப்பு. வெவ்வேறு குணமுள்ள மாநிலங்களின் ஒற்றைத் தொகுப்பாகத் திகழும் ஒரு நாட்டில், இந்த ஒற்றைத் தொகுப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்?
இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். இது இந்தியாவில் சரி வராது. ராகுல் சொல்வது ஒரு மோசடி திட்டம். ஒரே விதமான எண்ணங்கள், மற்றும் அதிக வரி கட்டும் மக்கள் வசிக்கும் நாட்டில் இது சாத்தியமாகலாம். ஜிஎஸ்டி ஒரே வரி விதிப்புக்காக, சிங்கப்பூரைக் கையைக் காட்டுகிறார்கள். சிங்கப்பூரின் ஜிஎஸ்டி., குறித்தான கொள்கையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே உள்ள மக்கள் தொகை வேறுபாட்டை பார்க்க வேண்டும். சிங்கப்பூரில் உணவுக்கும் ஆடம்பர கார்களுக்கும் 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் சாத்தியமாகுமா?
பெரும்பாலான உணவு பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு வழக்கமான வரி வசூலிக்கப்படுகிறது. மற்றவைகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. வரி வசூல் அதிகரிக்கும்போது, 28 சதவீத பட்டியலில் உள்ள பொருட்கள் மீதான வரி குறையும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி தொடரும் என்று ஜேட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
அவரது கட்டுரையில் ஆங்கில வடிவம்…
THE GST EXPERIENCE https://t.co/VY5eNavDq8
— Arun Jaitley (@arunjaitley) July 1, 2018