ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதை ஒட்டி சுயராஜ்யா என்கிற இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய ஓர் ஆண்டில் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும் இதனால் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் எழுபது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
In the first part of an exclusive interview to Swarajya, the Prime Minister answers key questions on the GST, which completed one-year milestone today.@TheJaggi https://t.co/lCi3FI8UfA
— Swarajya (@SwarajyaMag) July 1, 2018
பிரதமர் மோடி ஜிஎஸ்டி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி வரி என்பது, கேட்பதற்கு எளிதானதாகத்தான் இருக்கும். ஆனால் சொகுசுப் பொருளான மெர்சிடிஸ் கார்களுக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்குமா?
இப்போது ஏழை எளிய மக்கள் வாஙகும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் 18 சதவீதத்திற்குக் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும்? காங்கிரஸில் சிலர் ஒரே விகித ஜிஎஸ்டி குறித்துப் பேசி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
நாடு முழுவதும் ஒரே வரிமுறை என்பதால் மாநில எல்லைகளில் இருந்த வணிக வரிச் சோதனைச் சாவடிகள் ஒழிக்கப்பட்டு நேரமும் பணமும் சேமிக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. சரக்கு சேவை வரி சிக்கலானது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா?
17 வகை வரிகளும் 23 வகை மேல் வரிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே வரிமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. மாநில அரசுகளும் மக்களும் ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 400 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 150 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், சரக்கு சேவை வரி முறை வளர்ச்சி, எளிமை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
GST has brought growth, simplicity and transparency. It is:
Boosting formalisation.
Enhancing productivity.
Furthering ‘Ease of Doing Business.’
Benefitting small and medium enterprises. #GSTForNewIndia pic.twitter.com/IGGwUm59rB
— Narendra Modi (@narendramodi) July 1, 2018