உத்தரபிரதேசத்தின் ஜஹான்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு மாடு, டிராக்டர் வாங்க பணம் இல்லாததால் தனது 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுதார்.
இதுகுறித்து விவசாயியின் மகள் தெரிவிக்கையில், இந்த பகுதியில் மழை பெய்வது மிகவும் குறைவு. ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தற்போது மழை பெய்துள்ளது. இதனால், நானும் எனது சகோதரியும் நிலத்தை உழுதோம் என்றார்.
இதற்கு முன்பு மழை வேண்டி இரண்டு பிளாஸ்டிக் தவளைகளுக்கு இந்த மாவட்டத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.