புது தில்லி: நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்ற இந்திய யாத்ரீகர்களை மீட்டு அழைத்து வர, மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் நேபாள அரசின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளதாவது…
புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். 525 யாத்ரீகர்கள் சிமிகோட் பகுதியிலும், 550 பேர் ஹில்சா பகுதியிலும், 500 பேர் திபெத் பகுதியிலும் சிக்கியுள்ளனர். #IndiansStrandedInNepal
In Simikot a health check up has been done on all the elderly pilgrims. They are being provided required medical help. In Hilsa we have requested police authorities for necessary assistance. /3 #IndiansStrandedInNepal
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 3, 2018
சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில், இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.
சிமிகோட்டில், வயது முதிர்ந்த யாத்ரீகர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஹில்சா பகுதியில் உதவிக்கு போலீசாரின் உதவியை கோரியுள்ளோம். இந்திய யாத்ரீகர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்குமாறு நேபாள அரசின் உதவியைக் கோரியுள்ளோம்.
We have requested Government of Nepal for army helicopters to evacuate stranded Indian nationals. /4 #IndiansStrandedInNepal
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 3, 2018
யாத்ரீகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்க்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உதவிகள் வழங்க ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுகுறித்த எண்களையும் தனது டிவிட்டர் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் அளித்துள்ளார்.
Pl RT
Pranav Ganesh First Secy +977-9851107006
Tashi Khampa +977-98511550077
Tarun Raheja +977 9851107021
Rajesh Jha +977 9818832398
Yogananda +977 9823672371 (Kannada)
Pindi Naresh +977 9808082292 (Telugu)
R Murugan +977 98085006 (Tamil)
Ranjith +977 9808500644 (Malayalam)— Sushma Swaraj (@SushmaSwaraj) July 3, 2018